குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்களின் படங்கள் ஒரே நாளில் ரீலிஸ் – யார் யார் படம் தெரியுமா.?

0
cook with komali
cook with komali

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகள் பல மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் அனைவரின் பேவரட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி பிடிக்காத நபர்களே இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு  மக்களை சிரிக்க வைத்து வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி மக்களின் வரவேற்பை பெற்று 2 சீசன்கள் முடிந்துள்ளது அந்த வகையில் அடுத்து வரப்போகும் சீசன் எப்போது தொடங்கும் என பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. தேதி குறிப்பிடாமல் அதற்கான ப்ரோமோ கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேலும் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி எவ்வளவு பிரபலமோ அதுபோல இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, அஸ்வின், சிவாங்கி, புகழ் போன்ற பலரும் திரை உலகில் சிறப்பாக பயணித்து வருகின்றன. இதில் கோமாளியாக நடித்துவந்த புகழ் தற்போது டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

மேலும் இவர் திரைக்கு வர ரெடியாக உள்ள அஜித்தின் வலிமை திரைப்படத்தில்  புகழும் இணைந்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு கூட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாக உள்ள என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.  மேலும் இந்த சீசனில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான பவித்ரலெஷ்மி இவர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் “நாய் சேகர்” என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பவித்ரலெஷ்மியின் நாய் சேகர் திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. இதனிடையே குக் வித் கோமாளி இரண்டாவது  சீசனில் கலந்து கொண்ட அஸ்வின் மற்றும் பவித்ரலெஷ்மி ஆகிய இருவரின் படங்கள் ஒன்றாக வெளியாகி உள்ளது. இதனை  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.