அச்சு அசல் சமந்தா போல் மாறிய குக் வித் கோமாளி பவித்ரா.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது அயராத உழைப்பினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சமந்தா.

மேலும் சமந்தா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இறுதியாக இவர் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமந்தா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமந்தாவை போலவே இன்னொரு பிரபலம் மேக்கப் போட்டுக்கொண்டு மாறியுள்ளார் அந்த பிரபலம் யார் என்று கேட்டால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவித்ரா தான் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார்.

pavithra
pavithra

மேலும் பவித்ரா தெறி படத்தில் சமந்தா எப்படி மேக்கப் போட்டு உள்ளாரோ அதேபோல் அவரைப் போலவே தற்பொழுது மாறிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் போகப்போக நயன்தாராவாக மாறிடுவீங்க போல என இவரை கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment