கல்யாண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா.! வைரலாகி வரும் புகைப்படம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வருகிறது அந்த அளவிற்கு விஜய் டிவி தொலைக்காட்சி புதுப்புது சீரியல்கள் மற்றும் புதுப்புது நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில்தான் முடிவடைந்தது இதில் நிறைய பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் தனது பேச்சுத் திறமையால் ரசிகர்களை கவர்ந்த புகழ் சுமார் ஏழு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தை கொண்டு நடித்து வருகிறார் மேலும் இவர் சின்ன சின்ன விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பவித்ரா லட்சுமி இவர் தற்பொழுது சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஏனென்றால் இந்த புகைப்படத்தில் அவர் பார்ப்பதற்கு திருமண கோலத்தில் இருக்கிறார்.

pavithra5

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக நீங்கள் இப்படி ஒரு போட்டோ ஷூட் எடுத்தீங்க என பல கேள்விகளை அவரிடம் கேட்டு வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version