பல ஹோட்டலுக்கு ஓனராக இருக்கும் குக் வித் கோமாளி கிரேஸ்.! அவரே கூறிய தகவல்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கருணாஸ். இவர் ஹீரோவாக நடித்திருந்த திண்டுக்கல் சாரதி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஹீரோவாகவும் காமெடி நடிகராகவும் தன்னை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.  இவர் ஹீரோவையும் தாண்டி இசையமைப்பாளராகவும் தன்னை அறிமுகப் படுத்தினார் தற்பொழுது அரசியலிலும் ஈடுபட்டு மும்முரமாக பணியாற்றி வருகிறார். நடிகை கருணாஸ் மற்றும் இவருடைய மனைவி கிரேஸ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

கிரேஸ் பாடகி என்பது நாம் அறிந்த ஒன்று தான் ஆனால் சமீபகாலங்களாக விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் நடுவராக போட்டியாளராக பங்குபற்றி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் தற்போது சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பணியாற்றி வருகிறார்.

அண்மையில் கிரேஸ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் அப்பொழுது நான் கிரேஸ் ஹோட்டல் குறித்து பேட்டி அளித்திருந்தார். ஹோட்டல் வைப்பதில் இவரைவிட கருணாஸுக்கு அதிகாரம் இருந்ததாம். எனவே வடபழனியில் லொடுக்கு பாண்டி என்ற ஹோட்டல் நடத்தினோம்.

அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூர் கரூரில் திண்டுக்கல் சாரதி என்ற ஹோட்டல் நடத்தி வந்தோம். அதன்பிறகு கருணாஸ் ரத்ன விலாஸ் என்ற ஹோட்டல் திறந்தார்.  சினிமாவிற்கு பிறகு வேறு ஒரு தொழில் செய்ய வேண்டும் என்றால் அது ஹோட்டலாக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment