முரட்டு வில்லன் விஜய் சேதுபதியுடன் களம் இறங்கும் குக் வித் கோமாளி புகழ்.!

மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமா உலகில் வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள லாபம்,துக்ளக் தர்பார்,யாதும் ஊரே யாவரும் கேளிர்,மாமனிதன் போன்ற படங்கள் எல்லாம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற இருக்கிறது.

விஜய் சேதுபதி இந்த திரைப்படங்களை தொடர்ந்து தனது 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் உடன் கைகோர்க்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியவர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் இணைய உள்ளதாக புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் புகழ் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.

pukazh
pukazh

Leave a Comment