குக் வித் கோமாளி புகழ் மற்றும் அஸ்வினுக்கு அடித்த அப்பாயிண்ட்மெண்ட் ஆடர் இனி வேற லெவல் தான்.!

மக்களை நாள்தோறும் தொலைக்காட்சி முன் அமர வைத்த நிகழ்ச்சி தான் குக் வித்   கோமாளி சீசன் 2 இந்த சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்துவிட்டது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த மாதிரி இந்த சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கனி.

மேலும் இந்த சீசனில் பல போட்டியாளர்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள் அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழும் பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்பொழுது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் பலரும் இணைய தளத்தில் கேட்டு கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த நிலையில் அஸ்வின் மற்றும் புகழ் ஆகிய இருவரும் ஒரு சந்தோஷ செய்தியை ரசிகர்களுக்கு வெளியிட்டார்களாம்.

அதில் இவர்கள் 2 பேரும் புதிதாக ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகவும் அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கப் போவதாகவும் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை Trident Arts தயாரிக்கிறார்களாம்.

pukazh and ashwin
pukazh and ashwin

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எப்படியோ திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறீர்கள் என இவர்களைப் பாராட்டி வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் இந்த தகவல் தற்போது மக்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment