போலீசில் சிக்கிய குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா எதற்காக தெரியுமா.!

சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் பல நடிகைகள் மாறுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் பல நடிகர்கள் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள் விஜய் டிவியில் இருந்து பல சினிமா பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு மாறி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள்.

மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 2 இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல சினிமா பிரபலங்களும் தற்பொழுது வெள்ளித்திரையில் பல திரைப் படங்களில் கமிட்டாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மக்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்தவர்கள் பாலா மற்றும் புகழ் இவர்கள் இரண்டு பேருமே வெள்ளித்திரையில் பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்  புகழ் சுமார் ஏழு திரைப்படங்களில் கமிட்டாகி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவர்களைப் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இவர்கள் இருவரும் காரில் வரும்போது வழியில் ஒரு காவல்துறை அதிகாரி காரை மறித்து எதற்காக ஊரடங்கு நாட்களில் வெளியே வருகிறார்கள் என கேட்டதற்கு இவர்கள் 2 பேரும் டிவி ஷோ எங்களுக்கு இருக்கிறது அதனால் நாங்கள் செல்கிறோம் என கூறினார்களாம்.

pugazh2
pugazh2

அதுமட்டுமல்லாமல் அந்த காவல்துறை அதிகாரி முகத்தில் மாஸ்க் அணியாமல் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாராம் புகழ் மற்றும் காவல்துறை அதிகாரிக்கும் பேச்சி முத்தி போய் வாய் வார்த்தை சண்டையாக வந்துவிட்டதாம் புகழ் உடனே சார் நீங்க என் மேல கை வைக்காதீங்க நீங்க முதலில் மாஸ்க் போடுங்க என அந்த காவல்துறை அதிகாரிக்கு புத்திமதி கூறினாராம்.

pugazh
pugazh

ஆனால் திடீரென்று அவர் தங்களுடைய நண்பர் என்றும் மக்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதை நாங்கள் செய்தோம் என கூறியதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையிலேயே இது ஒரு நிஜமான சம்பவமா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment