புதிய சீரியல்.? புதிய தொலைகாட்சி.? விஜய் டிவியில் இருந்து எஸ்கேப்பான குக் வித் கோமாளி பிரபலம் – யார் தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.

வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் அசாதரணமான நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமானவர் தீபா. பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்த நகைச் சுவையான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமையல் தெரிந்த பிரபலங்கள் குக்காகவும் மற்றும் சமையல் தெரியாத சில காமெடியர்கள் கோமாளியாகவும் கலந்து கொண்டனர்.

ஆனால் தீபாவுக்கு சமையலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இருந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேச்சு மற்றும் முக பாவனை மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்து போனது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான முகம் ஆக மாறினார்.

மேலும் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி, அன்புடன் குஷி போன்ற தொடர்களில் ஹீரோவுக்கு தாயாக நடித்து அசத்தி உள்ளார். தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 2 நிகழ்ச்சியில் அவரது கணவர் சங்கருடன் இணைந்து கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி மக்களை மிகவும் கவர்ந்தது.

சமீபத்தில் திரையரங்கில் டாக்டர் திரைப்படம் வெளியாகி அமோக வசூலை ஈட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அர்ச்சனா போன்ற சிலருடன் இணைந்து தீபாவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு வேற லெவல் இருந்தது.

தற்போது வெளிவந்த தகவல் என்னவென்றால் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இது காதலர்களான மதன் ரேஷ்மா ஆகியவை இணைந்து நடித்து வரும் அபி ட்ரெய்லர் சீரியலில் தற்போது நடிக்க தீபாவும் கமிட்டாகியுள்ளார். அபி டைலர் சீரியல் செட்டில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

abi trailor
abi trailor

Leave a Comment