பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 490 எடுத்த குக் வித் கோமாளி பிரபலம்.! வியப்பில் ரசிகர்கள்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பாலா இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.

இவரின் சிறந்த காமெடி திறமையினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அதோடு இவரின் எதார்த்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தும்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவ்வாறு கலக்கி வரும் இவரைப் பற்றி ரசிகர்களை அதிர்ச்சி அடையும் வகையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பாலா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சிறந்த மாணவனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

bala

இவ்வாறு படிப்பிலும் சிறந்த விளங்கிய இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்ததால் படிப்பை நிறுத்திவிட்டு  சினிமாவின் காக்கி வருகிறார். இதனை அறிந்த ரசிகர்களும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version