குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா – கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படம் இதோ.

சின்னத்திரையில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதில் மக்கள் அனைவரின் பேவரட் நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் சற்று வித்தியாசமாக சமைக்கத் தெரிந்த சில பிரபலங்களுடன் சமைக்க தெரியாத காமெடி ஜாம்பவான்களை இறக்கி கலாட்டாவாக நடத்தி வந்தனர்.முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்களிடையே பிரபலம் அடைந்ததை அடுத்து தற்போது சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகின்றன.

மேலும் அண்மையில் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மக்களிடையே பிரபலமாகி தற்போது சினிமா உலகில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, அஸ்வின், புகழ், சிவாஜி போன்ற பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

இப்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஸ்ருதிகா. இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். Lபின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும்படி பிரபலம் அடையவில்லை.

ஸ்ருதிகா தற்போது இந்த சமையல் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மெண்ட் செய்து சமூக வலைதளங்களில் பிரபலமாகிவரும் ஸ்ருதிகா அவரது கணவர் அர்ஜுன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

shruthika-
shruthika-

Leave a Comment