“குட்டி தல” யுடன் புகைப்படம் எடுத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாண்டு அதிலிருந்து பல திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுக்கும் அப்படி தான் பல பிரபலங்கள் தற்போது சின்னத்திரையில் தாண்டி திரையில் கோலாகலமாக பயணிக்கின்றனர்.

தொடர்ந்து விஜய் டிவி பல இளம் தலைமுறையினரை கண்டெடுத்து வருகிறது அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. அதன்பின் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

இதன்முலம்  சிவாங்கிக்கு  லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு உள்ளார்.

கபடமில்லாத அவரது பேச்சு யார் எது சொன்னாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுவதால்  ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கும் பிடித்தவராக பார்க்கப்படுகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்பொழுது புகைப்படம் மற்றும் ரசிகருடன் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் குட்டி தல என செல்லமாக அழைக்கப்படும் சிஎஸ்கே அணியில் ரெய்னா கூட சமீபத்தில் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவாங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தற்போது குட்டி தலையுடன் புகைப்படம் எடுத்துவீட்டீர்கள் அடுத்த தல தோனி தல அஜித் தளபதி விஜய் கூட போட்டோ எடுக்க உங்களுக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டார்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version