பிக்பாஸ் சீசன் 5-யில் குக் வித் கோமாளி பிரபலம்.! இதுல யார் ஓவியா.? யார் லாஸ்லியா.? குழப்பத்தில் ரசிகர்கள்

தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் பார்த்து வருவது எதுவென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அப்படிய பிக்பாஸ் நான்காவது சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒப்பிட்டு பார்த்தால் ஒன்றாக தான் இருக்கும் என பலருக்கும் தெரிந்ததுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன்,ரேகா,அறந்தாங்கி நிஷா ஆகிய மூவரும் பிக்பாஸ் 4கில் கலந்து கொண்டனர்.

மேலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதாவும் பிக் பாஸ் 3ல் போட்டியாளர்களில் ஒருவறாக கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த சீசனில் இருந்து இரண்டு பேர் பிக் பாஸ் சீசன் 5தில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த இரண்டு பேர்கள் யார் யார் என்று கேட்டால் அரை இறுதிப் போட்டி வரை வந்த கனி மற்றும் சமீபத்தில் எலிமினேட் ஆன பவித்ராவும் ஆகிய இருவரும் இந்த பிக் பாஸ் 5 சீசனில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே கனியின் சகோதரி விஜயலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்பது குறிப்பிடதக்கது.

அதுமட்டுமல்லாமல் கோமாளிகளில் ஒருவரும் பிக்பாஸ் ஐந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என கூறுகிறார்களாம். அதிலும் குறிப்பாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கலந்துகொள்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.மேலும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

kani
kani

Leave a Comment