சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த குக் வித் கோமாளி பிரபலங்கள்.!

0

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சிசன்2 இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கு பெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள் அவ்வாறு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் மக்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது மேலும் இதில் பங்குபெற்ற பல பிரபலங்களுக்கும் தற்போது சினிமா பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஒரு சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இரண்டு பிரபலங்கள் வந்துள்ளனர் இதனை கொண்டாடும் வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கு பெற்ற பலரும் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்கள் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் பாலா,சிவாங்கி,புகழ் போன்ற பல பிரபலங்கள் இருக்கிறார்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதில் யார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்து உள்ளார்கள் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

sivangi
sivangi

ஆனால் இதைப் பார்த்தால் சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக ஏற்கனவே தகவல் கிடைத்தது.இதனையடுத்து இந்த புகைப்படம் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.