ஒரே மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடும் குக் வித் கோமாளி பிரபலங்கள்.! அட அதுக்குன்னு இத்தனை பேருக்கா.

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

ஏனென்றால் அனைத்து  நிகழ்ச்சிகளும் மிகவும் காமெடியாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எளிதில் விஜய் டிவி பிரபலம் அடைந்து விடுகிறது.  தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் விஜய் டிவி டப் கொடுத்து வருகிறது என்று கூறலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து மாபெரும் வெற்றிபெற்ற ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் வைரலானது. எனவே முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது.

இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட அனைவரும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிகழ்ச்சி எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து வருவார்கள்.ஏனென்றால் இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும்  ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம் என்று காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி சீசன் 2 நிறைவுபெற்ற நிலையில் அடுத்த சீசனுக்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் பட்  தற்பொழுது குக் வித் கோமாளி  கன்னடத்தில் ஒளிபரப்பாகி எனவே தற்பொழுது இவர் கன்னட  நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்களில்  மூவருக்கு மே மாதம் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்,

அஸ்வின்- மே 7

மணிமேகலை- மே 7

சிவாங்கி – மே 25

Leave a Comment