சோட்டா பீம் திருமணம் குறித்த சர்ச்சை!! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட விளக்கம்.

0

Controversy over Chotta Bheam’s marriage Description released by the production company: கார்ட்டூன் நிகழ்ச்சி என்றாலே முதலில் பேசப்படுவது சோட்டா பீம். அந்த அளவிற்கு சோட்டா பீமை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.

இந்த சோட்டா பீம்மில் இவர்கள் வசித்து வரும் அந்த கற்பனை ஊர் டோலக்பூர். இந்த டோலக்பூரின் இளவரசி இந்துமதி சோட்டா பீமின் நெருங்கிய தோழி ஆவார். சோட்டா பீமின் தோழி சுட்கி கொடுக்கும் லட்டினை உண்டதும் பீமுக்கு அதிக சக்தி கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே.

மேலும் இந்த தொடரில் சமீபத்தில் பீம் டோலக்பூர் இளவரசி இந்துமதி உடன் செல்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. எனவே இதனை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு நாள் லட்டு கொடுத்த சுட்க்கியை விட்டுவட்டு திரைப்படத்தில் வருவது போன்று பணக்கார பெண்ணோடு பீம் சென்றார். என்று சமூக வலைத்தள பக்கங்களில்# justice for chutki என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கி வந்தனர்.

தற்போது இதுகுறித்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான கிரீன் கோல்ட் அணிமேஷன் விளக்கத்தை வெளியிட்டுள்ளது. “சோட்டா பீம், சுட்கி மற்றும் இந்துமதி என இந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் குழந்தைகளே. இந்தக் கதாபாத்திரங்கள் திருமணம் செய்து கொண்டன என்று வரும் செய்திகள் அனைத்தும் பொய். இதை வைத்து யாரும் கருத்துப் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நமக்குப் பிடித்தமான குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்கவிடுவோம். அவர்களின் அப்பாவித்தனமான வாழ்க்கையில் காதல், திருமணம் எல்லாம் கொண்டு வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.