பார்ப்பவர்களை மிரட்டிய காஞ்சரிங் இதன் மூன்றாவது பாகம் ரிலீஸ் தேதி இதோ.

ஹாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதுவும் ஆக்சன் திரைப்படம், திரில்லர் திரைப்படத்திற்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது, ஹீரோக்களின் திரைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக விரும்புவார்கள். அதன் முகத்தை தனது பக்கம் திருப்பிய திகில் திரைப்படம்தான் காஞ்சுரிங்.

இந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகியது, நாற்காலியில் அமர்ந்திருக்கும் கோர முகத்துடன் இருக்கும் ஒரு பொம்மை அனைவரையும் மிரட்டியது, ஒரு வீட்டில் எல்லோறையும் பேய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. வெறும் 20 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 320 மில்லியன் டாலர் வரை வசூல் செய்தது.

அதேபோல் இந்த திரைபடத்தின் இரண்டாம் பாகத்தை 2016ம் ஆண்டு வெளியிட்டார்கள். இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் டேவில் மேட் மீ டூ இட் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் சேவ்ஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள். இந்த திரைப்படமும் ரசிகரிடம் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment