திருமண நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய ஹன்சிகா..! நயன்தாரா இவங்க பக்கத்துல கூட நிக்க முடியாது.? குவியும் வாழ்த்துக்கள்

hanshika
hanshika

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை ஹன்சிகா இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைய.. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் வேலாயுதம், ஜெயம் ரவி உடன் எங்கேயும் காதல் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து பிரபலமடைந்தார்.

இதன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் கிடு கிடுவென உயர்ந்தது அந்த ரசிகர்களும் இவருக்கு செல்லமாக குட்டி குஷ்பு என பெயர் வைத்தும் கூப்பிட்டு வந்தனர். சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை ருசித்து வந்த இவர்  கடந்த சில வருடங்களாக சினிமா உலகில் நடிப்பதை தவிர்த்து உடல் எடையை குறைப்பது அதிகம் கவனம் செலுத்தினார்.

ஒரு வழியாக அதைக் குறைத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து  தனது 50 வது திரைப்படமான மஹா திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் வெளியாகிய சுமாரான வெற்றியை பதிவு செய்தது அதனை தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் பாரிஸ் நகரில் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. அதனைத் தொடர்ந்து ஹன்சிகாவின் புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வழியாக கோலாகலமாக பழைய ஜெய்பூர் அரண்மனையில் திருமணம் அரங்கேறியது.

திருமணத்தை முன்னிட்டு நடிகை ஹன்சிகா ஜெய்பூர் அரண்மனையை சுற்றி இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருமண உணவுகளை வழங்கினார் அதோடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவுகளை வழங்கி அசத்தி உள்ளார் இதன் மூலம் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

நயன்தாரா திருமணத்தின் போது ஆதரவற்ற ஒரு லட்சம் பேருக்கு தான் உணவு வழங்கினார். ஆனால் ஹன்சிகா இந்தியா முழுவதும் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு கொடுத்து அசத்தி உள்ளார்.