ஜனனியின் செயலைப் பார்த்து குவியும் வாழ்த்துக்கள்.! வைரலாகும் தகவல்

பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகிறார்கள். அந்த வகையில் தனது வசீகரமான உடலமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் ஜனனி ஐயர்.

இவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் எந்த திரைப்படங்களும் சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும்,  துணை நடிகையாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் செய்துள்ள ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார். இவர் தனது பெயரான ஜனனி ஐயர் என்பதை ஜனனி இன்று மாற்றிவிட்டார் அதாவது தனது பெயரின் பின்னால் இருந்து ஜாதியை தூக்கி விட்டார்.

எனவே தற்பொழுது ரசிகர்கள் அனைவரும் இவரை பாராட்டி வருகிறார்கள். ஏனென்றால் தற்பொழுது ஜாதியின் பெயரை சொல்லி பலர் பந்தாவாக சுற்றி வருகிறார்கள். அந்தவகையில் ஜாதியின் வெறியும் அதிகளவில் இருந்து வருகிறது.  எனவே ஜனனி ஜாதி வெறியை விரும்பாததால் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.

jenani iyar 4
jenani iyar 4

ஏனென்றால் மலையாள நடிகர், நடிகைகள் பலர் ஜாதி பெயருடன் சுற்றி வருகிறார்கள் எனக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். அதோட ஜனனி தனது ட்விட்டரில் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் ஒற்றுமையுடன் ஜனனி என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment