மாநாடு திரைப்படத்தின் நான்கு நாட்கள் மட்டும் இவ்வளவு கோடியா.? போகின்ற நிலைமையை பார்த்த டாக்டர் படத்தையே ஓரம் கட்டும் போல..

தமிழ் சினிமாவிற்கு ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து  இயக்கி வருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது அதைத் தொடர்ந்து சென்னை 600028 என்ற திரைப்படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சிம்புவை வைத்து தற்போது இயக்கிய மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு உள்ளது மேலும்                நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த திரைப்படம் நான்கு நாட்கள் ஆன நிலையில் 30 கோடியை தாண்டி வசூல் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன.

முதல் நாள் மட்டுமே மாநாடு திரைப்படம் சுமார் 6 கோடியை கைப்பற்றியதால் இரண்டாவது நாட்களில் 14 கோடியும் மூன்றாவது நாளில் 22 கோடியும் வசூல் செய்து இருந்த நிலையில் நான்கு நாட்களில் 30 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சிம்புவின் எந்த ஒரு திரைப்படமும் இந்த அளவிற்கு வசூல் வேட்டையை நடத்தியதே கிடையாது.

முதல்முறையாக நல்ல வசூல் வேட்டை நடத்துவதால் சிம்பு தற்போது சந்தோஷத்தில் இருக்கிறாராம் மேலும் டாக்டர் திரைப்படம் 100 கோடியை அள்ளிக் இருந்தாலும் ஆரம்ப நாட்களில்  மாநாடு படத்தின் வசூலைவிட கமியாக இருப்பதாக கூறப்படுகிறது நிச்சயம் இன்னும் வருகின்ற நாட்களில் நல்ல வசூலை பெற்று சிவகார்த்திகேயன் படத்தின் டாக்டர் படத்தின் வசூலை செய்யும் என கூறப்படுகிறது..

ஆரம்ப நாட்களில் படம் நல்ல வசூல் வேட்டை நடத்துவது வழக்கம் தான் ஆனால் நாட்கள் போக போக எல்லாமே மாறும் அதை வைத்தே நாம் எதையும் கணிக்க முடியாது இருப்பினும் ஓரளவு நல்ல வசூலை பெற்று மக்களை மகிழ்வித்து வருகிறது மாநாடு.

Leave a Comment