தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கலக்கி வரும் இசையமைப்பாளர்கள்..! அதிலும் ஒருத்தர் முழுசா மூழ்கிடாரு..!

ஜிவி பிரகாஷ் அவர்கள் ஏ ஆர் ரகுமானின் உறவினர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் பிரபல இசையமைப்பாளரும் கூட இவர் தமிழ் சினிமாவில் வெயில், கிரீடம், தலைவா, தாண்டவம், ராஜாராணி, அசுரன், சூரரைப்போற்று போன்ற பல்வேறு திரைப்படங்களை இசையமைத்தது மட்டுமில்லாமல் சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்கியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் சமீபத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருவது மட்டுமில்லாமல் இசையிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் அடங்காது, சர்தார், வாடிவாசல், ருத்ரன், யானை போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

விஜய் ஆண்டனி அவர்கள் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் நாக்க முக்க என்ற பாடலுக்கு இசை அமைத்து பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானார் அதன்பிறகு  காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும் போன்ற பல திரைப்படங்களில் இசையமைத்தது மட்டுமில்லாமல் தற்போது பிரபல கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிப்ஹாப் ஆதி  இவர் சினிமாவில் குறைந்த திரைப் படங்களில் இசையமைத்து இருந்தாலும் சமூக வலைதளப் பக்கத்தில் மிகப் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் நேற்று இன்று நாளை, தனி ஒருவன், கதகளி, அரண்மனை போன்ற பல்வேறு திரைப்படங்களில் இசையமைத்து அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் மீசைய முறுக்கு பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கி வருகிறார்.

சித்தார்த்  இவர் மலையாள சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தது மட்டுமில்லாமல் மலையாள சினிமாவில் தான் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் அதன்பிறகு இவர் தமிழில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஹலோ நான் பேய் பேசுகிறேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அனிருத் இவர் தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-ஒன் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் ஆவார் இவர் தமிழில் 3 என்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைக்க ஆரம்பித்தார் அதன்பிறகு எதிர்நீச்சல், vip, கத்தி, காக்கி சட்டை, விவேகம், டாக்டர், பீஸ்ட் என  தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

Leave a Comment