பீஸ்டை ரோஸ்ட் செய்து ஓராண்டு நிறைவு.! வேகாத வெயிலில் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்…

பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் அவர்கள் சமீப காலங்களாக ஆள் அரவமே தெரியாமல் இருந்து வந்த நிலையில் இன்று விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் ஒரு ட்விட்டை பகிர்ந்து விஜய் ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.

அதாவது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தினால் நடிகர் விஜய்யையும் இயக்குனர் நெல்சன் திலிப் குமாரையும் சர்வதேச அளவில் ட்ரோல் செய்தார்கள்.

இருந்தாலும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு ஆகிவிட்டது குறித்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்  ஹாஷ்டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் கொண்டாடியது பொறுக்காமல் ப்ளூ சட்டை மாறன் விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து இருக்கிறார்.

அதாவது பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த மறுநாளே யாஷ் அவர்கள் நடிப்பில் உருவான கேஜிஎப் 2 திரைப்படமும் வெளியானது. பீஸ்ட்டை விட டபுள் மடங்கு வெற்றி பெற்ற கே ஜி எஃப் 2 ஹிமாலயா சாதனை படைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் பல கோடி வேட்டையாடியது. இந்த படமும் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது இதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

என்னதான் வசூல் சக்கரவர்த்தியாக இருந்தாலும் விஜய்யை ஓரம் கட்டிய கே ஜி எஃப் படத்தில் நடித்த யாஷ்க்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் வரவேற்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி ஒரு ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் பீஸ்ட் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாயித்து ட்ரோல் செய்து இருக்கிறார்.

அதாவது பீஸ்டை ரோஸ்ட் செய்து ஓர் ஆண்டு நிறைவு என்று கமெண்ட் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வம்புக்கு இழுத்திருக்கிறார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment