பிக்பாஸ் வீட்டை ரணகளப்படுத்த களத்தில் குதிக்க ரெடியாக இருக்கும் போட்டியாளர்கள்.! யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்கள்.? முழு லிஸ்ட் இதோ.!

0

தொலைகாட்சியை  பொறுத்தவரை ஒரு நிகழ்ச்சியை சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்து விட்டால் அதையே சீசன் சீசனாக நடத்தி வருவது வழக்கம் அதிலும் விஜய் டிவி சொல்ல வேண்டாம் வருடத்திற்கு பல நிகழ்ச்சிகள் இருக்கும் அதில் ஏதாவது இரண்டு கிளிக் ஆகிவிட்டாலே அதை சீசன் சீசனாக வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும்.

அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் கொடுத்து மக்களின் ஆதரவை அதிகப்படுத்தி உள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் தனது சிறந்த பங்களிப்பை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக உலகநாயகன் கமல்ஹாசன் நடத்துவதால் இதற்கு நல்ல வரவேற்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஐந்தாவது சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோ மற்றும் லோகோ ஆகியவை அவ்வப்போது வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வருகின்ற அக்டோபர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் நேரம் மற்றும் மாற்றப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளிவரை 10முதல் 11:00வரை.

சனி, ஞாயிறு மட்டும் 9:30 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால் போதும் என ஒருபக்கம் சந்தோஷப்பட்டு வருகின்றனர். பிக் பாஸ் 5 வது சீசனில் யார் யார் கலந்து கொள்ள போகிறார் என்பதைப் பற்றி இன்னும் சரிவர முழு லிஸ்ட் வெளி வராமல் இருந்து வந்த நிலையில் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு லிஸ்ட் ஒன்று உலாவி வருகிறது.

அதன்படி பார்த்தால் குக்கு வித் கோமாளி கனி, சுனிதா, விஜய் டிவி பிரியங்கா, சூசன் ஜார்ஜ், வடிவுக்கரசி, ஷகிலா மகள் மீலா, திருநங்கை நமிதா மாரிமுத்து, துள்ளுவதோ இளமை அபிநவ், மைனா நந்தினி, நடிகை பானுபிரியா, கண்மணி சீரியல் லிசா, பாய்ஸ் பட மணிகண்டன், நடிகர் இமான் அண்ணாச்சி, ஜெமினி கணேசன் பேரன் ராமானுஜம் போன்றோர் பங்குபெற அதிக வாய்புகள் உள்ளதாக கூறிபடுகிறது.