தளபதி விஜயின் “பீஸ்ட்” படத்தில் இப்படி ஒரு பாடல் இருக்கு.! போட்டு உடைத்த நெல்சன் திலீப்குமார்.

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேலும் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது.

இந்த திரைப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது சமீபத்தில் கூட இந்த படத்தின் சூட்டிங் டெல்லியில் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யா செல்ல இருக்கிறது.

இந்த நிலையில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பிறந்தநாள் என்பதால் பீஸ்ட படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட்  அல்லது போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் வெளிவராமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு சிறப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்பொழுது அவர் பீஸ்ட் படம் குறித்து பேசியுள்ளார். பிஸ்ட் படம் சூப்பராக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நீங்கள் யாரும் எதிர்பார்க்காத மரண குத்து சாங் இருக்கும் என கூறியுள்ளார் மேலும் அது இளசுகளை தொடர் ஆட்டம் போட வைக்கும்.

மேலும் இதுவரை நீங்கள் பார்க்காத தளபதி என்ட்ரி இதில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் இச்செய்தியை ரசிகர்கள் இணையதள பக்கத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment