தனது மகள் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்ப்பதற்கு கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் தளபதி விஜய்.!

தமிழ் சினிமா உலகில் தனது திரைப்படங்களை ரசிகர்களுக்கு தரமாக கொடுத்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் தளபதி விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களால் தற்போது வரை பாராட்டப்பட்டு வருகிறது.

பொதுவாகவே தனது திரைப்பயணத்தில் நல்ல திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பார்கள்.

அந்த வகையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவரது திருமண வாழ்க்கையில் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை மணம் முடித்துக் கொண்டார் இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக இவரது மகன் சஞ்சய் கூடிய சீக்கிரம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இவரது மகளும் இவர் நடித்த தெறி திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்திருப்பார் இந்நிலையில் விஜய் தனது மகள் பேட்மிட்டன் விளையாடுவதை பார்ப்பதற்காக வரிசையில் ஓரமாக இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்  தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay8
vijay8

மேலும் இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் தனது மகள் விளையாடுவதை பார்ப்பதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவு செய்வது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment