தனது 66வது திரைப்படத்திற்காக தெலுங்கு இயக்குனரை தேர்வு செய்த தளபதி விஜய்.! கதை வேற லெவல் தான்.!

0

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது தனது 65வது திரைப்படத்திற்காக தளபதி விஜய் ஜார்ஜியா நாட்டிற்கு சென்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

தளபதி விஜயின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிக வசூல் செய்வதால் இவரை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கு இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது தெலுங்கு இயக்குனர் ஒருவர் தளபதி விஜயை வைத்து அருமையான ஒரு திரைப்படம் இயக்கப் போகிறார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆம் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சி இவர் விஜயை சந்தித்து கதை கூறிவிட்டு விஜய்க்கும் கதை மிகவும் பிடித்துவிட்டதாம் இதனால் விஜய் வம்சி இயக்கத்தில் அடுத்ததாக தனது 66வது திரைப்படத்திற்காக இயக்குனரை கண்டுபிடித்து விட்டார் என்று கூட கூறலாம்.

thalapathi 66
thalapathi 66

வம்சி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு தில் ராஜு இந்த திரைப்படத்தை தயாரிக்க போகிறாராம் தெலுங்கு,தமிழ் என இரு மொழிகளிலும் படம் டப்பிங் செய்து வெளியிட போகிறார்களாம் கூடிய சீக்கிரம் இதற்கான அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இதன் அதிகாரப்பூர்வ தகவல் எப்போது வரும் என சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டு வருகிறார்கள்.