சம்பள விஷயத்தில் சூப்பர் ஸ்டாரை பின்னுக்குத் தள்ளிய தளபதி விஜய்.!

தமிழ் சினிமாவில் பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திக் கொண்டு வலம் வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தமிழ் சினிமாவில் கூறுகின்றனர்.

இந்த மூன்று நடிகர்களுக்கும் இடையே அவ்வப்பொழுது சம்பளம் மாறிமாறி ஏறி, இறங்கிய வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வரும் தளபதி விஜய் ஒவ்வொரு படம் வெற்றி பெறும் போதும் தனது சம்பளத்தை சற்று அதிகரித்த வண்ணமே போய்க்கொண்டிருக்கிறார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம்  அதிரிபுதிரி ஹிட் எடுத்ததை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கை கோர்த்தது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளை மேற்கொள்ள ரெடியாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறார்.

முதல் முறையாக தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும்  விஜய் 118 கோடி சம்பளம் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிகம் சம்பளம் வாங்கும் நபராக தளபதி விஜய் தற்போது மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment