அடுக்கு அடுக்காக பிரபுதேவாவிற்கு கோரிக்கை வைத்த தளபதி விஜய்..! மண்டையைப் பிய்த்துக் கொண்டு நிற்கும் பிரபுதேவா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் தளபதி 66வது திரைப்படத்தை பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில்  தளபதி 66வது திரைப்படத்தை வம்சி படிபள்ளி இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம்  தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களுக்கு  நடன இயக்குனர் பிரபுதேவா அவர்கள்தான் நடனம் சொல்லித் தர உள்ளாராம்.

நடிகர் விஜய் இதுவரை தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அந்த வகையில் முதன்முதலாக இவர் தெலுங்கிலும் கால்தடம் பதிக்க உள்ளார் பொதுவாக விஜய் நன்றாகவே நடனமாடுவார் இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசத்தை எதிர்பார்ப்பார்கள் இதன் காரணமாகவே பிரபுதேவா நடனம் அமைக்க விஜய் கேட்டுக் கொண்டாராம்.

அந்தவகையில் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் பாடலில் தளபதிவிஜய் நடனமாடி இருப்பார் இவ்வாறு அவர் நடனமாடியது பிரபுதேவா வற்புறுத்தலின் காரணமாக தான்  என தெரியவந்துள்ளது.  மேலும் தெலுங்கில் முதன்முதலாக வெளியாகப்போகும் இத்திரைப்படம்  அட்டகாசமாக இருக்க வேண்டும் ஆகையால் தான் பிரபுதேவாவை  விஜய் தேர்வு செய்தாராம்.

vijay66

அதேபோல தன்னுடைய என்ரீயும் மிகவும் மாஸாக இருக்க வேண்டும் அதற்கு தகுந்தாற்போல் அசைவுகளை கம்போஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாராம். ஏற்கனவே விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து போக்கிரி படத்தில் மாபெரும் வெற்றி கண்டார்கள் அந்த வகையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version