காய்கறி சந்தைவிற்கும் இடத்தில் தளபதி விஜய்.! ரசிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இதோ.

சினிமா உலகில் ஒரு ஹிட் படத்தை கொடுப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல ஒரு கதை சிறப்பாக இருந்தாலும் அந்த கதையை சூப்பராக எடுக்க இயக்குனரை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது மற்றும் தயாரிப்பாளரும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு பட்ஜெட்டை ஓதுக்கினால் படத்தை விறுவிறுப்பாகவும் சொன்ன தேதியில் முடித்து கொடுத்தாலும் திரையரங்கில் வெளிவந்து வெற்றி அடைய செய்வது மிகப்பெரிய சாதனை போன்றது அப்படி வந்த படம் ரசிகர்களை மகிழ்விப்பதோடு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த படம் பிளாக்பஸ்டர் படமாக மாறும்.

அதை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். தொடர்ந்து சிறப்பான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் போன்றவர்களை சரியாக செலக்ட் செய்து படத்தை கொடுப்பதால் அந்த படங்கள் ஒவ்வொன்றும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது இவர் தனது65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைபடமும் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என ரசிகர்கள் தற்போது மணகோட்டைகட்டியுள்ளனர்.

அதற்குக் காரணம் நெல்சன் திலிப்குமார் சிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் தற்போது விஜய்யுடன் இணைந்து உள்ளதால் v65 மிகப்பெரிய வசூலை ஈட்டும் என கூறப்படுகிறது. விஜய் 65வது திரைப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தது ஆனால் தற்போது நடக்கின்ற சூழல் சரியில்லாததால் படத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் விஜய் பற்றிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளிவந்து வைரல் ஆகின்றன அது போலவே தான் தற்போது தளபதி விஜய் காய்கறி மார்க்கெட்டில் உட்கார்ந்து புகைப்படம் தற்போது இணைய தள பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது மதுர படத்தின் சூட்டிங்கில் எடுக்கப்பட்டிருக்கும் என தற்போது ரசிகர்கள் கூறி வருகின்றனர் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vijay
vijay
vijay
vijay

Leave a Comment