படக்குழுவை விட பிரம்மாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்ட தளபதி ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவுலகில் தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு மிகவும் நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் இளைய தளபதி விஜய் இவரது  நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000ம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அதுமட்டுமல்லாமல் தளபதி தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவருடன் கை கோர்த்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 திரைப்படத்தை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போகிறது என எப்பொழுதே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் இந்த  படத்திற்கான சூட்டிங் படபிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடிந்து ஏப்ரல் மாத இறுதியில் பூந்தமல்லியில் உள்ள கோகிலம் ஸ்டூடியோவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்காக தளபதி விஜயின் ரசிகர்கள் பலரும் மோஷன் போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

அவ்வாறு அவர்கள் செய்த வீடியோ காணொளி தற்போது  இளையதளபதி விஜய் ரசிகர் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

https://twitter.com/Vijay65FilmPage/status/1376151434752757768?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1376151434752757768%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fdinasuvadu.com%2Fthalapathy-65-is-the-magnificent-motion-poster-of-the-film%2F

Leave a Comment