கைக்குழந்தையுடன் தளபதி 65 ஆவது பட நடிகை பூஜா ஹெக்டே.!

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் கை கோர்த்துள்ளார்.

நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தற்பொழுது தளபதி 65 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடதக்கது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகைதான் பூஜா ஹெக்டே.

இவர் தமிழில் இறுதியாக முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு தோல்வியை தழுவித் தந்ததால் தமிழில் வேற எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்க முடியாமல் தெலுங்கு திரையுலகில் ஆர்வம் காட்டி வந்தார்.

தெலுங்கில் இவருக்கு பல திரைப்படங்கள் குவிந்திருந்தது இந்நிலையில் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக தளபதி 65 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைக்கிறார் பூஜா ஹெக்டே.

மேலும் கடந்த சில நாட்களாகவே இவரது புகைப்படம் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது அந்த வகையில் பூஜா ஹெக்டே தனது கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

pooja hegde
pooja hegde

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது என்ன உங்க குழந்தையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment