தளபதி65 திரைபடத்தின் பூஜைக்கு தாறுமாறான தலைமுடியுடன் செம்ம கெத்தாக வளம் வந்த விஜய்.!

தளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 65 இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போகிறது மேலும் இந்த படத்திற்காக அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளிவந்தது அதில் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்கப்பட உள்ளது என தகவல் கிடைத்தது அது மட்டுமல்லாமல் உடனே இன்னொரு தகவல் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது அதில் கொரோனா தொற்று காரணமாக ரஷ்யாவில் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக எடுக்கப்பட்டு பின்பு சென்னையில் ரஷ்யா செட் போட்டு படம் எடுக்கப் போகிறார்கள் என தகவல் கிடைத்தது.

அந்த திரைப்படத்தின் பூஜை இன்று காலையில் சென்னையில் உள்ள சன் ஸ்டுடியோவில் நடைபெற்று உள்ளது இந்த பூஜையில் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல் தற்போது பரட்டை தலையுடன் பூஜையில் கலந்து கொண்டுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜை ஹெட்டேக் இந்த பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பூஜையில் கலந்து முடியவில்லை என வருத்தத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளாராம்.

vijay

மேலும் விஜயுடன் இணைந்து இந்த பூஜையில் நெல்சன்,ஒளிப்பதிவாளர் மனோஜ், பரமஹம்சா,கலாநிதி மாறன் போன்ற படக்குழுவினர் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் விஜய் இந்த பூஜையில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் வேற லெவல் என்று தான் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version