முக்கிய நாட்டில் இருந்து சூட்டிங் ப்ளானை மாற்றும் தளபதி 65 படக்குழு.!அதுவும் எதற்காக தெரியுமா.?

தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில்அறிமுகமாகி பின் பிரபல இயக்குனர்களுடன் கைகோர்த்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருப்பார்கள் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது வசூல் ரீதியாகவும் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்துள்ளார் இந்த திரைப்படம் சட்டசபை தேர்தல் முடிந்ததும் ஆறாம் தேதி தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

vijay
vijay

அதில் ரஷ்யாவில் தளபதி 65 திரைப்படத்தை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் சில காட்சிகளை மட்டுமே ரஷ்யாவில் எடுத்துக் கொண்டு மீதி காட்சிகளை சென்னையில் ரஷ்ய அரங்கு அமைத்து படம் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எங்களுக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் தளபதி 65 ஆவது திரைப்படம் சரியான ஹிட்டாக வேண்டும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment