பிப்ரவரியில் வருகிறது.. ஐபிஎல் மெகா ஏலம் : 2 கோடி அடிப்படை விலையில் இருக்கும் டாப் வீரர்கள் யார் யார் தெரியுமா.? வெளிவந்த லிஸ்ட்.

ஐபிஎல் 15வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் லில் 8 அணிகள் இருந்தது இப்பொழுது லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் விளையாட உள்ளது.

அதற்கு ஏற்றார் போல தற்பொழுது ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள சுமார் 1214 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இருக்கும் எட்டு அணிகள் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திலும் சிறப்பான வீரர்களைத் தட்டி தூக்க அதிகம் ஆர்வம் காட்டும் என தெரியவருகிறது.

வீரர்களின் திறமைக்கு ஏற்றவாறு மதிப்பு மாற்றப்பட்டுள்ளது 2 கோடி அடிப்படையாக விலையை வைத்திருக்கும் வீரர்கள் சிறந்த வீரர்களாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் 2022-ல் 2 கோடியை அடிப்படை விலையில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்திய வீரர்கள் : அஸ்வின்,சஹால், ஷிகர் தவான்,இஷன் கிஷன், தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், படிக்கல், குருனால் பாண்டியா, ஹர்ஷா படேல், சுரேஷ் ரெய்னா, ராயுடு, ஷமி, தாகூர், உத்தப்பா, உமேஷ் யாதவ் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு வீரர்கள் லிஸ்ட் : அஷ்டன் அகர், முஜீப்,  பேட் கம்மின்ஸ், நாதன் கொல்டர் நைல்,  மிட்செல் மார்ஷ்,  ஹேசில்வுட்,  ஷகிப் அல் ஹசன், முஸ்தபிசுர் ரகுமான்,  ஆடம் ஸம்பா, சம் பில்லிங்ஸ், அடில் ரஷித்,  குயின்டன் டி காக்,  இம்ரான் தாஹிர், டுவைன் பிராவோ,  ஏவின் லூயிஸ்,  ஓடியின் ஸ்மித், டேவிட் வில்லி, லாகி ஃபர்குஷன்,  மார்க் வுட்,  ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ்,  டிரென்ட் போல்ட்,  ஷகிப் முகமது,  கிரிஸ் ஜோர்டன், இம்ரான் தாஹிர், டி லேஞ்ச்.

 

Leave a Comment