21 ம் தேதி வெளியாக உள்ள 6 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்.!!

வெள்ளிக்கிழமை நாள்தோறும் படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன அதுபோல இந்த வார வெள்ளிக்கிழமை அன்று 6 படங்கள் ரிலீசாக உள்ளன.

கன்னிமாடம், மாபியா, காட்பாதர், மீண்டும் ஒரு மரியாதை, குட்டி தேவதை மற்றும் பாரதம் போன்ற படங்கள் வெளிவர உள்ளன.

அருண் விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாபியா இப்படத்தை கார்த்திக் நரேன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லனாக பிரசன்னா அவர்கள் நடிக்கிறார் மற்றும் சின்னத்திரை நடிகை பவானிசாகர் இதில் நடிக்கிறார். இப்படம் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களுக்கு முக்கிய படமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றன. அருண் விஜய் அவர்கள் மாபியா படத்தை தொடர்ந்து அக்னி சிறகுகள் படத்தில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா இயக்கி,நடித்துள்ள படம் மீண்டும் ஒரு மரியாதை இப்படம் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது இப்படத்தில் நாயகியாக ஜோமல்லூரி மற்றும் மவுனிகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்திய அரசின் தேசிய விருது பெற்ற படம் பாரதம். குடும்பத்தினர்கள் முதியவரை சரியாக கவனிக்காமல்  ஒரு முதியவரின் பற்றிய கதையாகும் படத்தை வெற்றிமாறன் அவர்கள் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார். பிரியா கிருஷ்ணசாமி அவர்கள் இயக்கியுள்ளார்.

காட்பாதர் படத்தில் நட்டி ராஜ் மற்றும் அனன்யா ஆகியோர் நடித்து வருகின்றனர் நட்டி அவர்கள் இதற்கு முன்பு எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதைத்தொடர்ந்து அவர் இப்படத்தில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். போஸ் வெங்கட் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் உள்ளார். இவர் தற்பொழுது இயக்கியுள்ள படம் கன்னிமாடம் இப்படத்தில் புதுமுக ஹீரோயினை அறிமுகப்படுத்தியுள்ளார். நாயகியாக சாயாதேவி நடித்துள்ளார்.

ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் குட்டி தேவதை. இப்படத்தில் சோழ வேந்தன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தேஜா ரெட்டி நடித்துள்ளனர்.

இந்த ஆறு படங்கள் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளன.

Leave a Comment