கும்கி படத்தில் நடித்த காமெடி நடிகருக்கு திருமணம் முடிந்தது.! மணப்பெண் இவர்தான் வைரலாகும் புகைப்படங்கள்.!

2012ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகிய திரைபடம் கும்கி இந்த திரை படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து இருந்தார் படத்தை லிங்குசாமி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

படத்தில் தம்பி ராமையா விக்ரம் பிரபுவின் மாமவாக நடித்திருந்தார் மேலும் யானைக்கு உதவியாளராக உண்டியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அஸ்வின். இவர்கள் செய்யும் காமெடிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வைரலானது, இந்த திரைப்படத்தில் யானையை வாடகைக்கு விடுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து செல்கிறது ஆனால் ஒரு கிராமத்தில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்டுவதற்காக இவர்கள் போவார்கள்.

அந்த காட்டு யானையை விரட்டினர்களா என்பதுதான் படத்தின் கதை, அந்த கிராமத்தில் பழமையை காலங்காலமாக கடைபிடித்து வருகிறார்கள், இந்த திரைப்படத்தில் உண்டியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அஸ்வின், இவர் கும்கி திரைப்படத்தை தொடர்ந்து ஜோதிகாவின் ஜாக்பாட், ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

kumki

இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது இந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே கூட்டம் கூட கூடாது இந்த நிலையில் சென்னையை சேர்ந்த டாக்டர் விஜயஸ்ரீ என்ற பெண்ணுக்கும் அஸ்வினுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது இது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

அதன் புகைப்படம் இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது, அஸ்வின் மற்றும் வித்தியா தம்பதிக்கு tamil360newz இன் வாழ்த்துக்கள்.

kumki

Leave a Comment

Exit mobile version