பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த பல நடிகர், நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலமடைய செய்து விடுவர்கள். அந்த வகையில் தனது மகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் தான் நடிகர் மோகன் ராமன்.
இவருடைய மகள் தான் நடிகை வித்யலேகா. இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
நடிகை வித்யலேகா 2012ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு வெளிவந்த நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சில காலங்களாக தமிழில் நடிக்காமல் தெலுங்கில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த வருடம் தெலுங்கில் மட்டும் ஆறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் வித்யலேகா தனது இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு சென்ற ஆண்டு 86.5 கிலோ இந்த ஆண்டு 65.3 கிலோ பதிவிட்டு போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வித்யுலேகாவை பாராட்டி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.
