யாருகிட்டயும் சொல்லல சாரி.. சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட சாண்டியின் முன்னாள் மனைவி..

Kaajal Pasupathi 2ed Marriage: பிரபல காமெடி நடிகை காஜல் பசுபதி திடீரென தனக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பொய் சொல்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர்தான் காஜல் பசுபதி. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். ஒரு கட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு வெள்ளித்திரைக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

அடேய் அப்ப அண்ணன் தங்கைன்னு சொன்னீங்களே டா.. இப்ப என்னடா கட்டிபிடிச்சு ரொமான்ஸ் பண்றீங்க.. நிக்சன் பூர்ணிமாவை வெளுத்து விடும் நெட்டிசன்கள்..

அதன்படி டிஷ்யூம், சிங்கம், கோ, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 என பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்து இருந்த காஜல் நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்களுடைய பிரிவிற்கு காஜல் மட்டுமே முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டது பிறகு சாண்டி வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் காஜல் திருமணம் செய்து கொள்ளவில்லை மேலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தார்.

பிளான் பண்ணி மாயாவை இருக்க வைக்க ஓட்டிங்கில் நடந்த தில்லுமுல்லு வேலை..? அடப்பாவிங்களா இப்படி எல்லாம் பண்ணுவீங்களா.. ஆதாரத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..

70 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த காஜல் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் சமீபத்தில் தனக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது திருமண கோலத்தில் இருக்கும் இவருடைய புகைப்படத்தை வெளியிட்டு ஒரு வழியா எனக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது… திடீரென நடந்ததால் சொல்ல முடியவில்லை என கூறி உள்ளார். எனவே  ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் அவர் பொய் சொல்கிறார் இது பழைய போட்டோ தானே எனவும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Kaajal Pasupathi 2ed Marriage
Kaajal Pasupathi 2ed Marriage