பல பேருக்கு பேர்க்கூட தெரியாமல் பிரபலமான 4 காமெடிநடிகர்கள்!! அதுவும் 100 படங்களா..

0

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சொல்லுமளவிற்கு பிரபலமடைந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் தமிழில் 100கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையாத நான்கு நடிகர்களை தற்போது காண்போம்.

சாம்ஸ்: இவர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.  இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்துள்ளார். இவர் ஆறு, மனங்கொத்தி பறவை,அறை என் 305 மற்றும் தேசிங்குராஜா போன்ற 100கும் மேற்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரைப் பார்த்தால் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் ஆனாலும் இவருக்கு என்று ரசிகர்கள் எவரும் இல்லை. இவரின் உண்மையான பெயர் சாம்ஸ் என்று பலர் அறியாத ஒன்று.

shams
shams

ரவி மரியா : இவர் தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் வில்லன் நடிகராக பிரபலமடைந்தார். அந்தவகையில் தேசிங்குராஜா,  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மனம் கொத்தி பறவை போன்ற இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்திருந்த படத்தில் எழில் திரைப்படம்தான் மிகவும் காமெடி நடிகராக பிரபலத்தை தந்தது. இவருடைய உண்மையான பெயர் ரவி மரியா என்று கூட பலருக்கு தெரியாது.

ravi-mariya
ravi-mariya

சுவாமிநாதன் : இவர் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆவார். இவர் பேசிய வசனங்களில் டேமீட் வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.  காமெடி நடிகர் சுவாமிநாதன் பாஸ் என்கிற பாஸ்கரன்,வேலாயுதம்,ஒரு கல் ஒரு கண்ணாடி, தேசிங்கு ராஜா,மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் அவர் உண்மையான பெயர் சுவாமிநாதன் என்பது பலருக்கு தெரியாது.

swaminathan
swaminathan

கிரேன் மனோகர் : இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில்  சாமி,  உன் காதல் இருந்தால், பொன்மகள் வந்தாள்,கழுகு-2,நுகம் உட்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதுவரையிலும் இவர் உண்மையான பெயர் கிரன் மனோகர் என்று பலருக்கு தெரியாது.

crane-manohar
crane-manohar