ஒருவழியாக சிறையிலிருந்து வெளிவந்த காமெடி நடிகர் புகழ் – இணையதளத்தை கிறங்கடிக்கும் வீடியோ.!

cook with comali
cook with comali

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது சினிமாவில் டாப் ஹீரோகளின் படங்களில் காமெடியாக நடித்து அசத்தி வருகிறார் புகழ். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் அடைந்தவர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகமெங்கும் தற்போது பிரபலமடைந்து காணப்படுகிறார். இவரது வளர்ச்சியை பார்த்து பலரும் பொறாமைப்படும் அளவிற்கு தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறார் புகழ்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தன்னை பிரபலப்படுத்திய குக் வித் கோமாளி மூன்றாவது சீசன்.

தற்போது ஒளிபரப்பாகி வருகிறது நேரம் கிடைக்கும் போது அதிலும் கலந்து கொண்டு மக்களிடம் என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார். இந்த நிலையில் புகழ் சினிமாவில் ஹீரோவாக கூட மிஸ்டர் ஜீ கீப்பர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டின் நிஜ விலங்குடன் நடந்துவருகிறது.

இந்த நிலையில் புகழ் தற்போது ஜெயிலில் இருந்து வெளிவருவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் புகழ் எதற்கு சிறையில் இருந்து வருகிறார் என பலரும் குழம்பி தவிக்கின்ற நிலையில் அந்த வீடியோ ஒரு ஷூட்டிங்குக்காக எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. இதோ அந்த வீடியோ.