யோகி பாபுவின் வெற்றிக்கு காரணம் இந்த காமெடி நடிகர் கூறிய வார்த்தை தானாம்.!! நல்ல மனுஷன் தான்.

0

comedy actor yogibabu get success in cinema field because of this actor advice: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்த செந்தில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி என அனைவரையும் கடந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது எந்த ஒரு நடிகராலும் தவிர்க்க முடியாத காமெடியனாக வளர்ந்துளளார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது இவர் ஹீரோவாக தனித்து நின்று படங்களில் நடித்து வெற்றி பெற்றும் வருகிறார். நடிகர் யோகி பாபு தனது வெற்றிக்கான காரணம் என்னவென்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனை அறிந்த சக நடிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

அதாவது இவர் காமெடி நடிகர் கவுண்டமணியின் அட்வைஸான எப்போதும் குறிக்கோள் மற்றும் கனவை நோக்கி ஓட வேண்டும், திரும்பி பார்க்கக் கூடாது என்பதை பின்பற்றியது தான். இவருக்கு சினிமாவில் கிடைத்த வெற்றிக்கான காரணம் என கூறியுள்ளார்.

நடிகர் யோகி பாபு கோலமாவு கோகிலா என்ற திரைப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது உள்ள நடிகர்கள் இவருடன் இணைந்து நடிப்பதை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.