தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுக்கு என்று போற்றப்படுபவர் தான் நடிகர் வடிவேலு இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த பல திரைப்படங்களின் காமெடி இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரபலமான நடிகர் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை விட்டுவிட்டு தற்போது ஒரு படி மேலே ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதை தொடர்ந்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.
இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆக அவர் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்பை விட்டு விட்டால் அதன் பிறகு கடன் அதிகமானதன் காரணமாக பல்வேறு சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகிறார்.
பொதுவாக சினிமாவில் நீண்ட நாட்கள் பிரபலமாக இருக்க வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபடவேண்டும் தான் அது மட்டுமில்லாமல் அதற்கேற்றார் போல் தான் உடல் வாஸ்தும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஆனால் உடல் அதற்கு தகுந்தார்போல் இருந்தும் வாய்ப்பு இல்லாமல் நடிகர் வடிவேலு தவித்து வருகிறார்.
இந்நிலையில் பல ஐஏஎஸ் உறுப்பினராக இருக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றில் நடிகர் வடிவேலு மனம் விட்டுப் பேசி உள்ளார். அப்போது அவர் கூறியது என்னவென்றால் நீங்கள் அனைவரும் ஒரு வருடமாக தான் லாக் டவுனில் இருக்கிறீர்கள் ஆனால் நான் பத்து வருடமாக அட்டவணையில் இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் எந்த ஒரு செயலையும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எனக்கு நரக வேதனையை கொடுப்பது போல் இருக்கிறது என மனம் விட்டு கண்கலங்கி தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
இவ்வாறு இவர் பேசியதைப் பார்த்த பல ரசிகர்களும் கண்கலங்க செய்துவிட்டார்கள்.
