வடிவேலு இந்த படத்துக்குலாம் செட் ஆகமட்டார்!! விவரம் இதோ.

comedy actor vadivelu : தமிழ் திரை உலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு ஆவார். இவரை எவராலும் அசைக்க முடியாத அளவிற்கு தற்பொழுது வளர்ந்துள்ளார்.  இவர் திரைப்பட நடிகராகவும், பின்னணி பாடகராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் 1999ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருக்கு அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பு திறமையால் வைகைப்புயல் எனும் பெயரால் பாராட்டப்பட்டார்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் காமெடிகளில் பிரபலமடைந்த சில காமெடிகள் இப்பவே கண்ண கட்டுதே, ஏண்டா இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு, என்ன சின்ன புள்ள தனமா இருக்கு, போங்க தம்பி நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது, மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு உட்பட இன்னும் பல காமெடிகள் உள்ளது. இவர் காமெடிக்கு சிரிக்காதவர்களே கிடையாது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று வைகைபுயல் என்றால் சும்மாவா.

இதை தொடர்ந்து இவர் நடித்த சின்னகவுண்டர் ,வரவு எட்டணா செலவு பத்தணா, இளவரசன் சிங்காரவேலன் ,தேவர்மகன் உட்பட இன்னும் ஒரு சில படங்களை ஒரே வருஷத்தில் நடித்துள்ளார்.

இதனை  தொடக்கமாக  கொண்டு ஒரு திரைப்படத்தில் வடிவேலை ஹீரோவாக வைத்து ஒரு படம் எழுதினார்கலாம். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஆனால் அப்படத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ளார். அப்படம் என்னவென்றால் துள்ளாத மனமும் துள்ளும் இப்படம் வடிவேலுக்காக எழுதிய படமாம் இதனை எழில் அவர்கள் இயக்கியுள்ளார்.

விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை ஆரம்பித்த படம் இப்படம் ஆகும். இதன் மூலம் தான் விஜய் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகபடியான வரவேற்பை பெற்றார். ஆனால் காமெடி நடிகர் வடிவேல் இவரால் இந்த படம் நடிக்க முடியுமா என்று கேள்விகள் உள்ளது ஏனென்றால் சென்டிமென்ட் மற்றும் நடனம் ,காதல் போன்றவற்றில் வடிவேல் அவர்கள் நடிப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் காமெடியில் கலக்கி எடுத்து இருப்பார்.

இந்தப் படம் ஹிட் ஆவதற்கான காரணம் அதிலுள்ள இசை, பாடல்வரிகள் ரசிகர்கள் மத்தியில் அப்படத்தின் பாடல் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதில் மிகையாகாது. இந்த விஷயத்தை எழில் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் ரசிகர்கள் விஜய் நடித்தது தான் சரி வடிவேல் அவர்கள் காமெடி தான் நல்லா இருக்கும் என சொல்லியுளளனர்.

Leave a Comment