மீம்ஸ்களின் மன்னன் இம்சை அரசன் வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்.!! இணையதளத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்

0

comedy actor vadivelu birthday: காமெடி நடிகர் வடிவேலுவின் அறுபதாவது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு ரசிகர்கள் இணையதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்றளவும் மீம்ஸ் என்றால் இவரின் புகைப்படங்களை வைத்து தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் இணையதளங்களை தெரிக்கவிட்டு வருகிறார்கள்.

மீண்டும் இவர் மெர்சல், சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்லாமல் வெப்சீரிஸ் கையிலும் எடுத்துக்கொண்டு வருகிறார். நடிகர் வடிவேலுவின் காமெடி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவரின் காமெடியை பார்த்து ரசிப்பார்கள்.

எவ்வளவு கஷ்டமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் இவரின் நகைச்சுவையை பார்த்து சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவுக்கு அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் முதன்முதலாக கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் உடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன்பின் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனியாளாக படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.

இவரின் உடலமைப்பை பார்த்தாலே நகைச்சுவைக்கு சரியாக இருக்கும் என தெரியும். இயக்குனர் ஷங்கர் இயக்கிய காதலன் படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத்தொடர்ந்து இவர் நடித்த மருதமலை, வெற்றிகொடி கட்டு,  சந்திரமுகி, தலைநகரம், பிரண்ட்ஸ், லண்டன், வெடிகுண்டு முருகேசன் புகைப்படங்கள் எடுக்கும் மிகப்பெரிய வெற்றி படங்களாக இருந்தது.

இவர் ஹீரோவாக இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் நடித்திருந்தார்  அதுவும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இன்று வைகை பயல் வடிவேலு அவர்களின் 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் பொருட்டு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இணையதளங்களில் நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.