விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி காலமானார்.!! ரசிகர்கள் அதிர்ச்சி.

0

vadivel balaji passed away: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது நடிப்பின் மூலம் சிரிக்க வைப்பார்.

இவர் வைகைப்புயல் வடிவேல் போல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. வடிவேல் பாலாஜி வடிவேல் போல வண்டு முருகன், நாய் சேகர், சூனா பானா வடிவேலுவின் அனைத்து வசனங்களையும் அச்சுப்பிசகாமல் அவரைப் போலவே பேசுவார்.

இவர் நடுவர்களிடையே கவுண்டர் கொடுக்கும் விதம் என அனைத்துமே சிறப்பாக இருக்கும். இவர் தைரியமாக அனைவரையும் கலாய்க்கும் விதம் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

வடிவேல் பாலாஜி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அனைத்திலும் கலந்து கொள்வார். அதுமட்டுமல்லாமல் இவர் கோலமாவு கோகிலா போன்ற சில படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 நாட்களாக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மேலும் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அங்கு இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவரின் இறப்பு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைவரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.