காமெடிநடிகர் சதீஷ் என் மகளா இது.! எப்படி மடமடவென வளர்ந்து விட்டார் பார்த்தீர்களா.!

0

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் கவுண்டமணி செந்தில் காமெடிகள் தனி ரகம் அதேபோல் வடிவேலு மற்றும் விவேக் காமெடிகள் ஓய்ந்த நிலையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களே இல்லை என்று கூறும் நிலை வந்தது அப்பொழுதுதான் நடிகர் சதீஷ் காமெடியனாக களமிறங்கினார்  பல முன்னணி காமெடி நடிகர்களில் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் சதீஷ்.

காமெடி நடிகர் சதீஷ் எட்டு வருடங்களாக கிரேசி மோகன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றி வந்தவர், இவர் முதன்முதலில் விஜய் இயக்கிய பொய் சொல்லப் போகிறோம் என்ற காமெடி திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பிறகுதான் மதராசபட்டினம், எதிர்நீச்சல் ,மான்கராத்தே என பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார்.

மேலும் காமெடி நடிகர் சதீஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்து வந்தார் இந்த தொடர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது ஆனால் இந்த தொடர் சில காரணங்களால் வெறும் 25 எபிசோட் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது.

சினிமாவில் காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டிருக்கும் சூரி மற்றும் யோகிபாபு அவர்களுக்கு பட வாய்ப்புகள் மிக எளிதாக கிடைத்துவிடும், ஆனாலும் நடிகர் சதீஷ் அவர்களுக்கும் பட வாய்ப்பு கிடைத்து வருகிறது இந்தநிலையில் சதீஷ் கீர்த்தி சுரேஷ் அவர்களுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது இதனை தொடர்ந்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தன்னுடைய மகளுடன் கொஞ்சி விளையாடும் சதீஷின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.