நல்ல நாளில் தனது மகனை வெளி உலகத்திற்கு காட்டிய காமெடி நடிகர் கிங் காங்.! வைரலாகும் புகைப்படம்.

king kong
king kong

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி அடைகின்றனர் அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100 படங்களுக்கும் மேலாக நடித்து இருந்தாலும் அவர்களுக்கென ஒரு இடம் சினிமாவில் கிடைக்காமலேயே போய்விடுகிறது.

மேலும் அவர்களுக்கு சரியான அந்தஸ்தும் சினிமாவில் வழங்க படாமல் போவதால் அந்த நடிகர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுகின்றனர். நடிப்பின் மூலம் மக்களை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைக்கும் குணச்சித்திர நடிகர், நடிகைகள் சினிமா உலகம் தான் அவர்களை கண்டுகொள்ளவில்லை. மக்களும் அவர்களை கொண்டாட மறந்து விட்டனர்.

ஆனால் சிலர் குணச்சித்திர நடிகர், நடிகைகளை நாம் எப்போதும் மறந்து விட மாட்டோம் . அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து நடித்து வரும் நடிகர்  கிங் காங் சமிப காலமாக சினிமா உலகில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் பின்னி பெடல் எடுப்பார். இதனால் அனைவருக்கும் பிடித்த நடிகராக இப்போதும் இருக்கிறார் நடிகர் கிங் காங்.

இந்த நிலையில் அவருடைய மகனின் பிறந்த நாள்  இன்று.  சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.