ஹீரோ போல் காட்சியளிக்கும் காமெடி நடிகர் பால சரவணன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
bala-saravanan
bala-saravanan

வெள்ளித்திரையில் காமெடி நடிகராக வலம் வரும் பல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பால சரவணன் இவர் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது காமெடியான செயலை செய்து காட்டி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் மக்களுக்கு புதிதாக ஒரு செயலை செய்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அந்த வகையில் பார்த்தால் இவர் பல கிராமத்து கதை களம் கொண்ட திரைப்படங்களில் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் இவரை தமிழ் சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும் இருப்பினும் தற்போது திடீரென்று ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் டான் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாலசரவணன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் பார்ப்பதற்கு தொந்தியும்,தொப்பையுமாக இருந்தா பால சரவணன் தற்போது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

ஆம் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டான் திரைப்படத்தில் நடிப்பதாகவும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் பதிவு செய்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் பதிவு செய்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு கதாநாயகன் போல் காட்சி அளிக்கிறார்.

மிகவும் அழகாக இருக்கிறார் என பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இவரை இறுதியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் பார்த்தது தான் அதற்குப் பின்பு இவரை பார்க்கவே முடியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.