பலரையும் சிரிக்க வைத்த செந்தில் வாழ்க்கையில் இவ்வளவு வலியா.! நாலு வருஷமா வாடகை கூட கட்டல..

senthil
senthil

Actor Senthil: காமெடி நடிகர் செந்தில் பேட்டி ஒன்றில் முதன்முறையாக தன்னுடைய நிலைமை மற்றும் குடும்பம் குறித்து கூறியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. இவ்வாறு காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிகர் செந்திலின் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் இருந்துள்ளதா என்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

மேலும் நான் நம்பியவர்கள் தன்னை ஏமாற்றி போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் வரை ஏறி இறங்க வைத்து விட்டதாகவும் நடிகர் செந்தில் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான செந்தில் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவ்வாறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசியலிலும் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நகைச்சுவை நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் திகழ்ந்து வருகிறார். செந்தில் தற்போது வரையிலும் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காயிடம் பிடித்துள்ளார்.

அப்படி செந்தில், கவுண்டமணி இவர்களுடைய காம்பினேஷன் தான் பெரிதளவிலும் ரசிகர்களை கவர்ந்தது. அப்படி இவர்கள் இணைந்து நடித்த படங்களும் நல்ல வரவேற்பினை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாக சினிமாவை விட்டு விலகிய இவர் தற்பொழுது தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் செந்தில் விரைவில் தொடங்க இருக்கும் கரகாட்டக்காரன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக உறுதியாக கூறியுள்ளார். இந்நிலையில் சமீப பேட்டியில் செந்தில் கூறியதாவது, நான் பலரை சிரிக்க வைத்திருக்கிறேன் ஆனால் என்னுடைய வாழ்க்கையிலும் பல போராட்டங்களும், பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது.

நான் கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டி அதை எனக்கு தெரிந்த நடிகர் ஒருவரிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி இருந்தேன். அவர் அதை இன்னொருவருக்கு மேல் வாடகைக்கு கொடுத்திருக்கிறார் நான்கு வருடங்களாக அவர் வாடகை தரவில்லை. தண்ணி பில்லு, கரண்டு பில்லு எல்லாவற்றையும் நான்தான் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால் ரொம்ப டென்ஷன் ஆகி இருப்பாங்க ஆனால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் தான் இருக்கிறேன். முறைப்படி கோர்ட் மூலமாக போய் இப்போதுதான் அதற்கு தீர்ப்பு வந்திருக்கிறது ஆனாலும் இன்னமும் வாடகை பணம் எனக்கு கிடைக்கவில்லை என்று செந்தில் பேசிவுள்ளார்.