பிறந்தநாளை முன்னிட்டு தனது மனைவியுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட காமெடி நடிகர் சதீஷ்.!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரவேண்டும் என பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் சதீஷ் இவர் காமெடி நடிகனாக இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்க முடியவில்லை இதன் பின்பு இவர் விஜய்,ஜீவா,அஜித் போன்ற பிரபல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததால் ஓரளவுக்கு இவர் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

மேலும் இவர் பல பேட்டிகளில் கல்யாணம் எனக்கு இன்னும் ஆகவில்லை யாராவது பெண் இருந்தால் கூறுங்கள் என பேசி வந்தார் திண்ணையில் இறுந்தவனுக்கு திடுக்குனு வந்து தாம் கல்யாணம் என்ற பழமொழிக்கு ஏற்ப இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது தனது புகைப்படங்களை வெளியிட்ட சதீஸ் தொடர்ந்து தனது மனைவியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அதே போல் தனது மனைவியுடன் சேர்ந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஏனென்றால் அவரது மனைவிக்கு இன்று பிறந்த நாளாம் அதனால் சிந்துவிற்கு சதீஷ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

sathish
sathish

Leave a Comment