ரஜினி முருகன் படத்தில் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் மரணம்.! சோகத்தின் உச்சியில் சினிமா பிரபலம்.

திரை உலகில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்த பிரபலங்கள் பலரும் தற்போது உயிரிழந்து வருவதால் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

சமிப காலமாக பிரபலங்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது கேவி ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, குட்டி ரமேஷ், விவேக் போன்றவர்கள் மறைவு தமிழ் சினிமாவில் ஈடு செய்ய முடியாத ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஒரு சிலர் மாரடைப்பால் மறைந்தனர் மற்றவர்கள் கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து உள்ளனர் மேலும் மருத்துவமனையில் ஆங்காங்கே நாடி வருகின்றனர்.

கொரோனா  இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பரவி உள்ளதால் மாநில அரசுகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை அதிரடியாக எடுத்து வருகிறது மேலும் கொரோனா தொற்றுகாக நிதி உதவியையும் ஆங்காங்கே தன்னால் முடிந்தவற்றை பிரபலங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தன்னால் முடிந்ததை கொடுத்து வருகின்றனர்.

இப்படி உலகமே  கொரோனா அச்சத்தில் பயந்து போய்க் கிடக்க பிரபலங்களின் இறப்பு தற்பொழுது மேலும் கஷ்டத்தை கொடுத்துள்ளது அந்த வகையில் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்த கோ டைரக்டரும் நடிகருமான பவுன்ராஜ் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். яндекс

இதனை பொன்ராஜ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இச்செய்தி தற்போது ரசிகர்களையும், சினிமா பிரபலங்கள் பலரையும்  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment